தமிழகம்

சென்னையில் 20-ம் தேதி பாஸ்போர்ட் சிறப்பு முகாம்

செய்திப்பிரிவு

மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் வரும் 20-ம் தேதி சிறப்பு பாஸ்போர்ட் மேளா நடத்தப்படுகிறது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று (17-ம் தேதி) தொடங்குகிறது.

நாடு முழுவதும் ஒரு கோடி பேருக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்ற இலக்கை பாஸ்போர்ட் அலுவலகம் நிர்ணயித்துள்ளது. இதன்படி, நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்கள் மூலம், சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு விரைவாக பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது.

இதன்படி, சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில், சாலிகிராமத் தில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் வரும் டிச.20-ம் தேதி சிறப்பு முகாம் நடத்தப்படு கிறது. இதற்கான, ஆன்லைன் முன்பதிவு இன்று மதியம் 2.45 மணிக்கு தொடங்குகிறது. www.passportindia.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

SCROLL FOR NEXT