தமிழகம்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாஜக போட்டி: தமிழிசை சவுந்தரராஜன் தகவல்

செய்திப்பிரிவு

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்த லில் பாஜக போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாரதியார் பிறந்தநாள் விழா நேற்று நடந்தது. பாரதியார் படத்துக்கு கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

மத்திய அரசு, தமிழுக்கு எதிராக செயல்படுவதுபோல் சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர். பாரதி யார் பிறந்தநாள் விழா, தற்போது வடஇந்திய மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. திருவள்ளுவர் பிறந்த நாளை தேசிய விழாவாக கொண்டாட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி முதல் ரூ.3 ஆயிரம் கோடி வரை செலவாகும். முழு செலவையும் மத்திய அரசே ஏற்க முடிவு செய்துள்ளது.

மத்திய அரசு பொறுப்பேற்ற 6 மாதங்களில் இதுபோன்ற பல் வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2011 முதல் சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 5 பேரை மத்திய அரசு 20 நாட்களில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. காங்கிரஸ் ஆட்சி யில் இருக்கும்போது கச்சத் தீவை மீட்பது பற்றி எதுவும் செய்யாத ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ் இளங் கோவன் ஆகியோருக்கு கச்சத் தீவு பற்றி பேச தகுதியே கிடையாது.

பாமக குறித்து சுப்பிரமணியன் சுவாமி டுவிட்டரில் கருத்து கூறியதை பெரியதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். திருப்பதியில் பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கதக்கது. தமிழகத்தில் கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக மொத்தம் 22.50 லட்சம் ஓட்டுகளை பெற்றது. தற்போது, இந்த எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது. 1 கோடி உறுப்பினர்கள் வரை சேர்க்க திட்டமிட்டுள்ளோம். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடும். இதற்கான அறிவிப்பை கட்சித் தலைமை அறிவிக்கும்.

இவ்வாறு தமிழிசை கூறினார்.

தமிழகத்தைச் சேர்ந்த அம்ரிதா, அபிஷேக் இருவரும் வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர். அம்ரிதா சிட்னியிலும், அபிஷேக் அமெரிக்காவிலும் வசிக்கின்றனர். பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தால் ஈர்க்கப்பட்ட இவர்கள், அதில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியை தேர்வு செய்து, குப்பைகளை தரம் பிரிப்பது, குப்பை மூலம் சம்பாதிப்பது பற்றி கற்றுக் கொடுக்க உள்ளனர்.

SCROLL FOR NEXT