கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் மற்றும் சின்னத்துறையைச் சேர்ந்த 26 மீனவர்களை வங்கதேசக் கடற் படை கைது செய்துள்ளது.
தூத்தூர் செபா என்பவருடைய `ஆவே மரியா’, ராஜன் என்பவருடைய `ஸீ மேரி, சின்னத் துறை செல்வராஜ் என்பவருடைய `அன்னை’ ஆகிய மூன்று விசைப்படகுகளில் மொத்தம் 26 மீனவர்கள், கொல் கத்தா அருகே உள்ள பெட்டுவகாட் என்ற இடத்தில் தங்கி மீன்பிடித்து வந்தனர்.
டிசம்பர் 9-ம் தேதி இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, `பி-313’ என்ற படகில் வந்த வங்கதேசக் கடலோர காவல்படையி னர் இவர்கள் அனைவரையும் கைது செய்தனர். இவர்களது 3 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
மீனவர்களையும், விசைப்படகு களையும் விடுவிக்கக் கோரி இந்திய ஜனாதிபதி, வெளியுறவுத்துறை அமைச்சர், தமிழக முதல்வர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு, தமிழ்நாடு மீனவர் வளர்ச்சி அறக்கட்டளைத் தலைவர் ஜஸ்டின் ஆன்டணி மனு அனுப்பியுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரி கள் நேற்று மீனவர்களின் வீடுகளுக் குச் சென்று விவரங்களை சேகரித் தனர்.