தமிழகம்

ராமதாஸுக்கு பாடம் எடுக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை: தமிழிசை சவுந்தரராஜன்

செய்திப்பிரிவு

ராமதாஸுக்கு பாடமெடுக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி யுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை பாரதம் திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை சென்னை மதுரவாயலை சேர்ந்த தனியார் பல்கலைக்கழக மாண வர்கள் சென்ட்ரல் ரயில் நிலை யத்தில் நேற்று நடத்தினர். இந்நிகழ்ச்சியை பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது: பிரதமரின் தூய்மை பாரதம் திட்டம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வருகிறது. பெண்கள், கல்லூரி மாணவர்கள் என பலரும் இத்திட்டத்தில் இணைந்து செயலாற்றி வருகிறார்கள். ராமதாஸ், வைகோ போன்ற வர்கள் கூட்டணிக்குள் இருந்து கொண்டே எதிர்க்கட்சி போல செயல்படக்கூடாது என்றுதான் நான் கூறினேன். இதற்கு நான் பாடம் எடுக்க கூடாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் மூத்த அரசியல் தலைவர் அவருக்கு நான் பாடம் எடுக்க வேண் டிய அவசியம் இல்லை. அதே நேரத்தில் கூட்டணியில் இருந்து கொண்டு ஒருவரை ஒருவர் கடுமை யாக விமர்சித்து பேசினால், மக்கள் நம்பிக்கை இழந்து போவார்கள். மறுமுறை அவர்களிடம் ஒன்றாக செல்லமுடியாது.

தமிழக மக்கள் நலனுக்கான செயல்களில் பாமக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்று ராம தாஸ் கூறியுள்ளார். பாஜகவும் அப்படித்தான். எங்கள் எம்.பியான தருண் விஜய் மொழி கடந்து திருக்குறளுக்காக பாராளு மன்றத்தில் குரல் கொடுத் தார். இதேபோல் அன்புமணி ராம தாஸும் பாராளுமன்றத்தில் பாமகவின் கருத்தை பிரதிபலிக்க லாம். இதைவிட்டுவிட்டு மனம் புண்படும்படியான வார்த்தை களை பேசுவது தேவையற்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT