குன்னம் தொகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2.44 கோடி பணத்தை பெரம்பலூர் கோட்டாட்சியர் அனிதாவிடம் ஒப்படைத்த தேர்தல் பறக்கும் படையினர்.

 
தமிழகம்

குன்னம் தொகுதியில் திமுக நிர்வாகி காரில் ரூ.2.44 கோடி சிக்கியது

ஓட்டப்பிடாரம் அமமுக வேட்பாளர் வீட்டில் ரூ.48 லட்சம் பறிமுதல்

செய்திப்பிரிவு

பெரம்பலூர் / நீலகிரி / கோவில்பட்டி / தென்காசி: பெரம்​பலூர் மாவட்​டம் குன்​னம் தொகு​தி​யில் திமுக நிர்​வாகி காரில் கொண்டு செல்​லப்​பட்ட ரூ.2.44 கோடி ரொக்​கத்தை தேர்​தல் பறக்​கும் படை​யினர் நேற்று முன்​தினம் இரவு பறி​முதல் செய்​தனர்.

தமிழக சட்​டபேரவை தேர்​தல் 23-ம் தேதி நடை​பெற உள்ள நிலை​யில், பெரம்​பலூர் மாவட்​டம் குன்​னம் தொகு​திக்​குட்​பட்ட செங்​குணம் பகு​தி​யில் வட்​டாட்​சி​யர் பழனிசெல்​வன் தலை​மை​யில் தேர்​தல் பறக்​கும் படை​யினர் நேற்று முன்​தினம் இரவு வாகன சோதனை​யில் ஈடு​பட்​டிருந்​தனர்.

அப்​போது, பெரம்​பலூரில் இருந்து குன்​னம் தொகு​திக்​குட்​பட்ட கீழப்​புலியூரை நோக்கி வந்த ஒரு காரை, தேர்​தல் பறக்​கும் படை​யினர் மடக்கி சோதனை செய்​தனர். இதில், காரில் இருந்த 5 அட்​டைப் பெட்​டிகளை பறக்​கும் படை​யினர் திறந்து பார்த்​த​போது, அதில் கட்​டுக்​கட்​டாக பணம் இருப்​பது தெரிய​வந்​தது.

இதையடுத்​து, அந்​தப் பணத்தை பறக்​கும் படை​யினர் பறி​முதல் செய்​தனர். இதில் ரூ.2 கோடியே 44 லட்​சம் இருப்​பது தெரிய​வந்​தது. ஆனால், அதற்கு உரிய ஆவணங்​கள் இல்​லாத​தால் பணத்​தை​யும், காரை​யும் பறக்​கும் படை​யினர் பறி​முதல் செய்து பெரம்​பலூர் கோட்​டாட்​சி​யரும், தேர்​தல் நடத்​தும் அலு​வலரு​மான அனி​தா​விடம் ஒப்​படைத்​தனர்.

இதுதொடர்​பாக காரில் இருந்த திமுக மாவட்ட விவ​சாய அணி துணை அமைப்​பாளர் ஜெய​ராமன், கார் ஓட்​டுநர் ராஜேஷ் கிருஷ்ணன் ஆகியோரிடம் விசா​ரணை நடத்​தினர். பின்​னர், அந்​தப் பணம் வரு​மான வரித்​துறை அதி​காரி​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது. அந்​தப் பணம் குன்னம் தொகுதி வாக்​காளர்​களுக்கு பட்​டு​வாடா செய்ய பெரம்​பலூரில் இருந்து எடுத்து செல்​லப்​பட்​டதா என்​பது குறித்து விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது.

நீல​கிரி​யில் ரூ.22 லட்​சம்

இதே​போல் ஊட்​டி​யில் உள்ள நீல​கிரி மாவட்ட திமுக அலு​வல​கத்​திலிருந்து கணக்​கில் வராத ரூ.22 லட்​சம் ரொக்​கத்தை தேர்​தல் பறக்​கும் படை​யினர் பறி​முதல் செய்​தனர். இங்கு வாக்​காளர்​களுக்கு வழங்​க​விருப்​ப​தாக வந்த தகவலயைடுத்து நேற்று முன்​தினம் அலு​வல​கத்​தில் சோதனை நடத்தப்​பட்​டது.

இதுகுறித்து உயர் அதி​காரி​களுக்​கும், வரு​மானவரித் துறை அதி​காரி​களுக்​கும் தகவல் தெரிவிக்​கப்​பட்​டது. இதன்​பேரில் திமுக நிர்​வாகி​கள் சிலரிடம் வரு​மானவரித் துறை​யினர் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

வேட்பாளர் வீட்டில் ரூ.48 லட்சம்

மேலும் தூத்​துக்​குடி மாவட்​டம், ஓட்​டப்​பி​டாரம் தொகு​தி​யில் அதி​முக கூட்​ட​ணி​யில் அமமுக சார்​பில் போட்​டி​யிடும் சுந்​தர்​ராஜ் வீட்​டிலும் ரூ.48 லட்​சத்து 3,000 பணம் பறி​முதல் செய்​யப்​பட்​டது. இந்த பணம் வாக்​காளர்​களுக்கு கொடுக்க வைக்​கப்​பட்​டிருந்​ததா என விசா​ரணை நடந்து வரு​கிறது.

தேர்​தல் பறக்​கும் படை​யினருக்கு வந்த தகவலின்​பேரில் ஓட்​டப்​பி​டாரம் முப்​புலிவெட்டி கிராமத்​தில் உள்ள அவரது வீட்​டில் நேற்று பறக்​கும் படை​யினர் மற்​றும் வரு​மானவரித் துறை​யினர் சோதனை​யிட்​டனர். சுமார் 7 மணி நேரம் நடந்த சோதனை​யில் ரூ.27 லட்​சத்து 65,000 சிக்கியது.

வீட்​டின் பின்​புறம் ஒரு பையில் இருந்த ரூ.6 லட்​சத்து 38,000-​மும் மற்​றொரு பையில் ரூ.14 லட்​ச​மும் இருந்​தது. இதன்​படி, மொத்​தம் ரூ.48 லட்சத்து 3,000 பறி​முதல் செய்​யப்​பட்​டது. அவை தேர்​தல் நடத்​தும் அலு​வலரிடம் ஒப்படைக்​கப்​பட்​டன.

கடையத்தில் ரூ.44 லட்​சம்

இது​போல், தென்​காசி மாவட்​டம், கடையநல்​லூர் வட்​டாட்​சி​யர் அலு​வல​கம் அருகே உள்ள கட்​டிடத்​தில் வைத்து திமுக​வினர் வாக்​காளர்​களுக்கு பணம் பட்​டு​வாடா செய்​வ​தாக, தேர்​தல் பறக்​கும்​படை அதி​காரி​களுக்கு நேற்​றிரவு 8 மணிக்கு தகவல் கிடைத்​தது. அங்​கிருந்த ரூ.44 லட்​சம் ரொக்​கத்தை அதி​காரி​கள் பறி​முதல் செய்​தனர்​.

SCROLL FOR NEXT