கூட்டணியில் இருப்பதும், அதில் இருந்து வெளியேறுவதும் அந்தந்த கட்சிகளின் உரிமை என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி யில் இருந்து மதிமுக விலகியது தொடர்பாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறி யுள்ளது. இதனால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. கடந்த மக்களவைத் தேர்தலில் மதிமுக வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டோம். அப்போது, நாங்கள் போட்டியிட வேண்டிய பல தொகுதிகளை மதிமுகவுக்காக விட்டுக்கொடுத்தோம்.
இந்த சூழலில் பாஜக ஆட்சி அமைந்தது முதற்கொண்டு, வேண்டுமென்றே மோடியை வைகோ விமர்சித்து வந்தார். அவர் இப்போது விலகியி ருப்பது மதிமுகவுக்கு நல்ல தல்ல. கூட்டணிக் கட்சிகள் கோரிக்கைகள் வைக்கலாம்.
ஆனால், விமர்சிக்க வேண்டாம் என்று தொடர்ந்து கூறிவருகிறேன். கூட்டணியில் இருப்பதும், வெளியேறுவதும் அந்தந்த கட்சிகளின் உரிமை. இவ்வாறு தமிழிசை கூறினார்.