தமிழகம்

பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறதா தேமுதிக? - ஜன.7-ல் கோவையில் விஜயகாந்த் முக்கிய ஆலோசனை

செய்திப்பிரிவு

பாஜக கூட்டணியில் நீடிப்பது குறித்து ஜனவரி 7-ம் தேதி கோவையில் நடக்க உள்ள தேமுதிக பொதுக்குழுவில் விஜயகாந்த் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றன. தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆனால், தேமுதிக போட்டியிட்ட ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் தோல்வியை தழுவியது. ஆனால், போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் 2வது இடத்தை பிடித்திருந்தது. மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் தேமுதிக தலைமையில் கூட்டணி அமையும் என ஏற்கனவே பாஜகவுக்கு நிபந்தனை விதித்திருந்தது. ஆனால், இப்போது, அக்கூட்டணி யில் இருந்த மதிமுக விலகியுள் ளது. இதையடுத்து, பாமகவின் நிலையை இன்னும் அறிவிக்க வில்லை.

இதற்கிடையே சமீபத்தில் சென்னைக்கு வந்த பா.ஜக தேசிய தலைவர் அமித்ஷாவை அன்புமணி, ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் மட்டும் சந்தித்தனர். தேமுதிக விஜயகாந்த் அவரை சந்திக்கவில்லை. தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் கூட்டணி அமைத்து, முதல்வர் வேட்பாளரை அறிவித்து போட்டியிடுவோம் என்று அமித்ஷா பேசியிருப்பது, தேமுதிக மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வரும் ஜனவரி 7-ம் தேதி கோவையில் தேமுதிகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடக்கவுள்ளது. இதில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு கட்சியின் பணிகள், வரும் சட்ட மன்ற தேர்தலை எதிர்க்கொள்ள தற்போது மேற்கொள்ள வேண் டிய பணிகள் குறித்து ஆலோ சனை நடத்துகிறார். குறிப்பாக பாஜக கூட்டணியில் நீடிப்பது குறித்து தேமுதிக கட்சியின் எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர் கள், நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்பார் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக தேமுதிக நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஆண்டுதோறும் நடத்துவது வழக்கமான ஒன்றுதான். இதில், கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி குறித்தும், வரும் சட்டமன்ற தேர்தலுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. பாஜக கூட்டணியில் எங்கள் கட்சியின் நிலை பற்றியும் மூத்த நிர்வாகிகள் பேசுவார்கள்’’ என்ற னர்.

SCROLL FOR NEXT