தமிழகம்

கடைகளில் பயன்படுத்திய வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள் பறிமுதல்

செய்திப்பிரிவு

ஸ்ரீபெரும்புதூரில் கடைகளில் பயன்படுத்தப்பட்ட 23 வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் அலுவலர் பவணந்தி கூறியதாவது: பெரும்புதூர் பகுதிகளில் உள்ள கடைகளில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுவதாக வந்த புகாரையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் பெரும்புதூர் பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடைகளில், மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் மற்றும் காஞ்சிபுரம் தனி வட்டாட்சியர் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், கடைகளில் பயன் படுத்தப்பட்ட 23 வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன . பறிமுதல் செய்யப்பட்ட காஸ் சிலிண்டர்கள், எச்.பி., காஸ் ஏஜென்சியிடம் ஒப்படைக்கப்பட்டன.

SCROLL FOR NEXT