மத்திய அரசு, ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமைப் பணி தேர்வுகளுக்கான வயது வரம்பை பெருமளவு குறைத்துள்ளதற்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது குறித்து வெளியிடப் பட்ட செய்தியில் கூறப்பட்டுள்ள தாவது:
மத்திய அரசு குடிமைப் பணி தேர்வுகளுக்கான வயது வரம்பை பெருமளவு குறைத்துள்ளது.
குடிமைப் பணிகளுக்கான வயது வரம்பு தாழ்த்தப் பட்ட பழங்குடி மாணவர்களுக்கு 35 வயதிலிருந்து 29 ஆகவும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 33 வயதிலிருந்து 28 வயதாகவும், பொதுப் பிரிவினருக்கு 30 வயதிலிருந்து 26 வயதாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த வயது வரம்பு குறைப்பு நடவடிக்கை இந்த ஆண்டே அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் குடிமைப் பணிகளுக்கு தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைத்து இருக்கிறது.
இந்த முடிவை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.