தமிழகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நள்ளிரவில் பாட்டில் குண்டு வீச்சு: தஞ்சையில் மர்ம நபர்கள் தப்பியோட்டம்

செய்திப்பிரிவு

தஞ்சாவூரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு பாட்டில் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில், கணபதி நகரில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகம் உள்ளது. இந்த அலுவல கத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு கார் நிறுத்தும் பகுதியில் திடீரென வெடி சப்தம் கேட்டுள்ளது. அலுவலகத் தில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது, எரிந்து கொண்டிருந்த நிலையில் பாட்டில் கிடந்தது. அங்கிருந் தவர்கள் தீயை அணைத்தனர்.

இத்தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மர்ம நபர்கள் மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட பாட்டில் குண்டை வீசிவிட்டுத் தப்பிச் சென்றிருப்பது தெரியவந்தது. மேலும், வாசலில் திரி எரிந்து கொண் டிருந்த நிலையில் வெடிக்காத, மண் ணெண்ணெய் நிரப்பப்பட்ட மற்றொரு பாட்டில் குண்டும் அங்கு கிடந்தது.

தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.தர்மராஜன், டிஎஸ்பி எஸ்.கண்ணன் மற்றும் போலீ ஸார் வந்து விசாரணை நடத்தினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கோ.நீலமேகம், நகரச் செயலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் புகார் தெரிவித்ததன்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

இந்த அலுவலக வாசலில் மதில் சுவருக்கு சுமார் 15 அடி தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த அலுவலக காரை இலக்காக வைத்து பாட்டில் குண்டு வீசப்பட்டிருக்கலாம் எனவும், வீசிய வேகம் குறைவாக இருந்ததால், குறி தவறி காருக்கு முன்பு இருந்த பக்கவாட்டுச் சுவர் மீது விழுந்து வெடித்திருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

மற்றொரு பாட்டிலையும் வீச முற்பட்டு, முயற்சியை பாதியில் கைவிட்டுச் சென்றிருக்கலாம் என்றும், கார் மீது விழுந்திருந்தால் பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்ட அலுவலகம் மீது வெள்ளிக்கிழமை இரவு பாட்டில் குண்டு வீசப்பட்டதற்கு அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்ட அலுவலகம் மீது வெள்ளிக்கிழமை இரவு விஷமிகள் சிலர் பாட்டில் குண்டுகளை வீசியுள்ளனர். தஞ்சாவூரில் செம்மண் கொள்ளை, நில ஆக்கிர மிப்பு, சுகாதார சீர்கேடுகள், சமூக ஒடுக்கு முறைகள் ஆகியவற்றை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் இயக்கங்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில் கட்சி அலுவலகத்தின் மீது வன்முறை தாக்குதல் நடத்தப் பட்டதை கட்சியின் மாநிலக் குழு வன்மையாக கண்டிக்கிறது.

தாக்குதலில் ஈடுபட்ட விஷமிகளை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இது போன்ற குண்டு வீச்சு சம்பவங்கள் எங்கும் நிகழாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மர்ம நபர்கள் மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட பாட்டில் குண்டை வீசிவிட்டுத் தப்பிச் சென்றிருப்பது தெரியவந்தது. மேலும், வாசலில் மற்றொரு பாட்டில் குண்டு வெடிக்காமல் கிடந்தது

SCROLL FOR NEXT