பால்வளத் துறை நிறுவனங்கள், சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு வருவதாக அமைச்சர் ரமணா தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக் கோட்டையில் பால் குளிரூட்டும் நிலையத்தை பால்வளத் துறை அமைச்சர் ரமணா நேற்று முன் தினம் மாலை திறந்துவைத்தார்.
இந்த விழாவில், பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அப்துல் ரஹீம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், ஊத்துக் கோட்டை பேரூராட்சித் தலைவர் பத்மாவதி ராஜமாணிக்கம், ஆவின் நிர்வாகத் தலைவர் சந்திரன், ஆவின் பொது மேலாளர் நடராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விழாவில் பால்வளத் துறை அமைச்சர் ரமணா பேசியதாவது:
பால் கொள்முதல் விலையை உயர்த்தி தருமாறு பால் உற்பத்தி யாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கையை ஏற்று, பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கொள்முதல் விலை பசும்பாலுக்கு 5 ரூபாயும், எருமை பாலுக்கு 4 ரூபாயும் உயர்த்தப் பட்டது.
எனவே, பால் கொள்முதல் விலை மற்றும் பதப்படுத்தும் செலவு களை ஈடுசெய்யவும், ஆவின் நஷ் டத்தை தவிர்க்கும் வகையில் மூன்று ஆண்டுகள் உயர்த்தப்படாமல் இருந்த ஆவின் பால் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
தற்போது தனியார் நிறுவனங் களின் பால் விலையைவிட ஆவின் பால் விலை குறைவே. அதுமட்டு மல்லாமல், மற்ற மாநிலங்களில் உள்ள பால் விலையை விட ஆவின் பால் விலை குறைவு.
பால்வளத் துறை நிறுவனங்கள், சேவை மனப்பான்மையுடன் செயல் பட்டு வருகின்றன. லாப நோக்கம் இல்லாத இந்தச் சேவையை பொது மக்கள் முழுமையாக பயன்படுத் திக் கொள்ள வேண்டும். பால் உற் பத்தியையும் விற்பனையையும் அதிகரிக்க பல்வேறு நடவடிக்கை களை அரசு எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.