தமிழகம்

ஸ்ரீரங்கம் தொகுதி குறித்து வெளிப்படையாக அறிவிக்கவில்லை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தண்டனை பெற்றபிறகு, ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி காலியாக இருப்பதை சட்டப்பேரவைச் செயலர் வெளிப்படையாக அறி விக்கவில்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பங்கேற்ற இவர் பின்னர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவைச் செயலர் அறிவிக்கை ஒன்றை நவம்பர் 8-ம் தேதி வெளியிட்டுள்ளார். அதை எம்எல்ஏக்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் என யாருக்கும் அனுப்பவில்லை. இணையதளத்தில் வந்திருப்ப தாக செய்தி. அது எனக்கு கிடைத் துள்ளது. தலைப்பில், `தமிழ்நாடு சட்டப்பேரவை செய்தித்தாள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் 27-ம் தேதி அளித்த ‘தீர்ப்பினை’ தொடர்ந்து என்று குறிப்பிட்டுள்ளார். தண்டனை வழங்கப்பட்டதை தொடர்ந்து என்று குறிப்பிடாமல், தீர்ப்பை தொடர்ந்து என்று குறிப் பிட்டுள்ளார்.

மேலும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜெயலலிதா வகித்துவந்த இடம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, தீர்ப்பு வந்த நாள் முதல் வெற்றிட மாக கருதப்படுகிறது என்று குறிப் பிட்டுள்ளார்.

தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தண்டனைக்கு ஆளாகியிருக் கிறார். அதனால் அந்த இடம் காலியாக இருக்கிறது என்று உறுதியாக தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அந்த இடம் வெற்றிடமாக ‘கருதப் படுகிறது’ என்று அறிவிக்கப் படுகிறது. இத்தகைய நிலையில் தான் இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால்தான் திமுக தலைவர் கருணாநிதி தமிழகத்தில் நடப்பது ஜெயலலிதாவின் பினாமி ஆட்சி. ஓ.பன்னீர் செல்வம், ஜீரோ பன்னீர்செல்வமாக பொம்மை ஆட்சி நடத்தி வருகிறார் என குறிப் பிடுகிறார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT