தமிழகம்

கோடம்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்

செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகராட்சி பாலங்கள் துறை மூலம் கோடம்பாக்கம் மேம்பாலத்தில் பழுது பார்க்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

அதனால் திங்கள்கிழமை முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப் பட உள்ளது. அதன்படி ஒரு மாதத் துக்கு அனைத்து ரக வாகனங்களும் வள்ளுவர் கோட்டத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வழி யாக வடபழனி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

இதற்கு மாற்றாக பசுல்லா சாலை மற்றும் ரங்கராஜ புரம் மேம்பாலம் வழியாக செல்ல வேண்டும். வடபழனியிலிருந்து கோடம்பாக்கம் வழியாக வள்ளுவர் கோட்டம் செல்லும் அனைத்து இலகு ரக வாகனங்களும் மேம்பாலத்தின் மேல் செல்ல அனுமதிக்கப்படும்.

SCROLL FOR NEXT