திருவாரூர் மாவட்டத்தில் மக்கள் பிரச்சினைக்காக ஆட்சியரை நான் சந்தித்தேன் என்பதற்காக அலுவலர்கள் 3 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். விரைவில் ஆட்சியரும் மாற்றப்படலாம் என்றார் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின்.
புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் மேலும் பேசியது:
ஆவின் நிறுவனத்தில் செய்த ஊழலை மறைக்க வேண்டும் என்பதற் காக திட்டமிட்ட செயல்தான் பால் விலை உயர்வு. அதேபோல, மின் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவித்திருக்கிறார்கள்.
கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள மின்திட்டங்களை செயல்படுத்தினாலே தமிழகம் மிகை மின் மாநிலமாக மாறிவிடும். அதை செய்தால் மின்திட்டங்கள் மூலம் ஊழல் செய்ய முடியாது என்பதற்காகவே பிற மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கப்படுகிறது.
தமிழகத்தில் ஆட்சி நடக்கிறதா என்று மக்களுக்கு சந்தேகம் எழுந் துள்ளது. கடந்த திமுக ஆட்சியை ஜெயலலிதா குறிப்பிடும்போதெல் லாம் மைனாரிட்டி அரசு என்று குறிப்பிட்டார். இருந்தும் 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி நடை பெற்றது.
ஆனால், தற்போது அவரே குற்றவாளியாக நிற்கிறாரே. எனவே, அதிமுக ஆட்சிக்கு பாடம் புகட்ட கிடைத்துள்ள வாய்ப்பை நாம் பயன்படுத்த வேண்டும் என்றார்.