தமிழகம்

லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: கனிமொழி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

ஒட்டு மொத்த சென்னை நகரமே குடிநீர் தேவைக்காக லாரிகளை நம்பியிருக்கும் வேளையில், லாரிகள் வேலை நிறுத்தம் பொதுமக்களை கடுமையாக பாதிக்கும் என திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி கூறியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும், நாளை (ஜூலை 8) முதல், தண்ணீர் எடுக்கப்போவதில்லை என தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கம் அறிவித்திருக்கிறது. அரசு அதிகாரிகள் தனியார் தண்ணீர் லாரிகளை, சிறைபிடிப்பதை கண்டித்து, 25 ஆயிரம் தண்ணீர் லாரிகள் ஓடாது என்றும் அச்சங்கம் தெரிவித்திருக்கிறது.

இந்தநிலையில் கனிமொழி தனது ட்விட்டர் பதில் கூறுகையில் ‘‘ஒட்டு மொத்த சென்னை நகரமே தங்கள் குடிநீர் தேவைக்காக இந்த லாரிகளை நம்பியிருக்கும் வேளையில், 'லாரிகள் வேலை நிறுத்தம்' பொதுமக்களை மிகக்  கடுமையான சிரமங்களுக்கு ஆளாக்கும்.ஆகவே தமிழக அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, இதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT