வடகிழக்கு பருவ மழையால் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலை யில், அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியுள்ளது
இந்தாண்டு தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழையும், வட கிழக்கு பருவ மழையும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க கை கொடுத்தது. தென்மேற்கு பருவ மழை காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் 113 அடி வரை வந்தது. பின், டெல்டா பாசனத்துக்கு அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், நீர்மட்டம் 90 அடிக்கு கீழ் சரிந்தது. கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் அதிகளவு பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் பருவமழை பெய்வதால், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு முழுவது மாக நிறுத்தப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 102.34 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 8,134 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.