தமிழகம்

ஹாட்லீக்ஸ் : செந்தில் பாலாஜிக்கு  எதிர்ப்பு!

செய்திப்பிரிவு

செந்தில்பாலாஜி பெரும் கூட்டமாக வந்து கழகத்தில் இணைந்ததால் கரூர் மாவட்ட திமுகவில் அப்போது யாரும் அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

ஆனால், முன்னாள் மாவட்டச் செயலாளரான மறைந்த வாசுகி முருகேசனின் ஆதரவாளர்கள் இப்போது லேசாக எதிர்ப்பைக் கிளப்புகிறார்கள்.

வாசுகியின் பிறந்த நாளின்போது ஆதரவாளர்கள் பலரும் ‘வாசுகி முருகேசனின் எதிரியான செந்தில் பாலாஜிக்கு மாவட்டச் செயலாளர் பதவியா? உண்மையான திமுக ரத்தம்தான் மாவட்டச் செயலாளராக இருக்க வேண்டும்’ என்றெல்லாம் சமூக வலைதளங்களில் தகவலைப் பரப்பினார்கள்.

அத்துடன், ‘வாசுகியின் குடும்பத்தில் ஒருவருக்குதான் பொறுப்பு வழங்கப்படும்’ என்று வாசுகியின் மரணத்தின்போது ஸ்டாலின் சொல்லிச் சென்றதையும் நினைவுபடுத்தி இருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT