தமிழகம்

வைகோ இன்று மலேசியா பயணம்

செய்திப்பிரிவு

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று மலேசியா செல்கிறார்.

இது தொடர்பாக மதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பினாங்கு துணை முதல்வர் இராமசாமி ஒருங்கிணைத்து நடத்துகின்ற 'பினாங்கு உலகத் தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்து வைகோ சிறப்புரை ஆற்றுகிறார். மலேசிய எதிர்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் நிறைவுரை ஆற்றுகிறார்.

மாநாட்டின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பினாங்கு தண்ணீர்மலை முருகன் கோயில் அரங்கில் நடைபெறுகின்றன. 08, 09 ஆகிய இரண்டு நாட்களிலும் பினாங்கு பே வியூ ஹோட்டலில் மாநாடு நடைபெறுகிறது.

உலகம் முழுவதும் பல நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள். மாநாட்டு நிகழ்ச்சிகள் நிறைவுற்ற பின்னர் டைப்பிங், ஈப்போ, பட்டர்ஒவர்த் ஆகிய இடங்களில் நடைபெறுகின்ற பொதுக்கூட்டங்களில் வைகோ சிறப்புரை ஆற்றுகிறார். 12 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை திரும்புகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT