தமிழக மீனவர்கள் 5 பேரின் தூக்கு தண்டனையை எதிர்த்து தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் நடத்தி வரும் போராட்டத்தை வரவேற்பதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கை நீதிமன்ற நியாயமற்ற முறையில், அப்பாவி மீனவர் ஐந்து பேருக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது.
முள்ளிவாய்க்கால் பெருங்கொலை செய்த உலகப் பெரும் குற்றவாளி ராஜபக்சவின் அரசால் வழங்கப்பட்ட, இந்த தீர்ப்பபைக் கண்டித்து, விடுதலைப் பேராட்ட காலத்தில் பிறப்பெடுத்த இந்திய இளைஞர்களின் புரட்சிகர இயக்கமான அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், சென்னையிலுள்ள இலங்கை தூதுரகத்தை முற்றுகையிட்டது. கால்வதுறையினர் இவர்களை கைது செய்துள்ளனர்.
மீனவர்களை இலங்கை அரசு, தூக்குத் தண்டனையிலிருந்து விடுதலை செய்யும் வரை, இந்திய அரசு இலங்கையின் உடனானா ராஜீய உறவுகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன் இந்த முற்றுகை நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்திற்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநில தலைவர் இரா.திருமலை, மாநிலச் செயலாளர் வ.பாலமுருகன் தலைமை ஏற்றனர். பெரும் எண்ணிக்கையில் இளைஞர் பெருமன்றத்தின் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதைத்போன்ற போராட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதுடன், தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து பேரையும் விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது" என அவர் கூறியுள்ளார்.