தமிழகம்

இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 18.5 கிலோ தங்கம் பறிமுதல்

செய்திப்பிரிவு

இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 18.5 கிலோ தங்கக் கட்டிகளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் திருவாரூர் அருகே பறிமுதல் செய்தனர்.

வேதாரண்யம் - திருத்துறைப் பூண்டி சாலையில் நேற்று காலை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அந்த காரில் ஆவணங்கள் ஏதுமில் லாமல் 18.5 கிலோ தங்கக் கட்டி களை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக வேதாரண்யத்தை சேர்ந்த தியாகப்பன் (39), கோடியக் கரையை சேர்ந்த அண்ணாதுரை (38) கைது செய்யப்பட்டனர்.

SCROLL FOR NEXT