தமிழகம்

அரசு பேருந்தில் இந்திமொழி வாசகம் இடம் பெற்றது எப்படி?- தமிழக அரசு விளக்கம்

செய்திப்பிரிவு

தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்தில் இந்தி மொழி வாசகம் இடம்பெற்றதாக சர்ச்சை வெளியான நிலையில் இதுபற்றி அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து தமிழக போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ‘‘பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிதாக வாங்கப்பட்டு இயக்கப்படும் பேருந்துகளானது, தேசிய அளவிலான ASRTU and ARAI  நிறுவனங்களின் வழிக்காட்டுதலின்படியேகட்டுமானங்களும், கூண்டுகளும் அமைக்கப்படுகின்றன.

அந்த வகையில், பயணிகளின் பாதுகாப்புக்கு ஏதுவாக இரு புறங்களிலும் அவசரக்கால வழிகள் (Emergency Exits) அமைக்கப்பட்டுள்ளன. இதனை, பயணிகள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில், தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து வகையான அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளிலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்படுவதோடு, பார்த்தவுடன் எளிதில் அறிந்துகொள்கின்ற வகையில் வழிக்காட்டி ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்காக அண்டைமாநிலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ஒரே ஒரு பேருந்தில், இந்த அவசரக்கால வழிக்கான ((Emergency Exits) ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கரில் ஆங்கிலத்தோடு, இந்தி மொழியிலும் எழுதப்பட்டிருப்பதாக அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு, அது உடனடியாக சரி செய்யப்பட்டுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT