எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக ஒவ்வொரு மாவட்டத்தில் ரூ.10 கோடிக்கு மேல் செலவு செய்ததாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தநிலையில் 32 மாவட்டங்களில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு தமிழக அரசு ரூ.6 கோடியே 88 லட்சத்து 7 ஆயிரம் மட்டுமே செலவு செய்துள்ளது தகவல் அறியும் உரிமைச்சட்டம் தெரிய வந்துள்ளது.
மறைந்த முதலமைச்சர் எம்ஜிர் பிறந்து 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் தமிழக அரசு அவரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடடியது.
கடந்த 20017ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி மதுரையில் தொடங்கி 2018ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி சென்னையில் நிறைவு விழா வரை 32 மாவட்டங்களில் இந்த விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாக்களில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நேரடியாக பங்கேற்றனர். ஒவ்வொரு விழாவிலும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு எம்ஜிஆர் பற்றிய புகைப்பட கண்காட்சி திறக்கப்பட்டன.
இந்த விழாவுக்கு தமிழக அரசு தேவையில்லாமல் மக்கள் வரிபணத்தை விரயம் செய்ததாகவும், ஒவ்வொரு விழாவுக்கு ரூ.10 கோடிக்கு மேல் செலவு செய்ததாகவும் எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்நிலையில் மதுரை நெல்பேட்டையை சேர்ந்த ஹக்கீம் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு தமிழக அரசு செலவு செய்த விவரங்களை பெற்றுள்ளார்.
இதன் மூலம், 32 மாவட்டங்களில் நடந்த இந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு தமிழக அரசு ரூ.6 கோடியே 88 லட்சத்து 7 ஆயிரம் மட்டுமே செலவு செய்துள்ளது தகவல் அறியும் உரிமைச்சட்டம் தெரிய வந்துள்ளது.