மத்திய அரசு நிறைவேற்றத் துடிக்கும் மோட்டார் வாகன சட்டத் திருத்தம், அபராதத் தொகைகளை பல மடங்காக உயர்த்தும் என்பது மட்டும்தான் வெளியே தெரிகிறது. உண்மையில், அதைவிட பாதிப்பு கள் அதிகமாகவும், மாநில அரசு களின் உரிமைகளைப் பறிப்பதாக வும் அமையும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
இந்தியாவில் 1939-ல் மோட்டார் வாகனச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்குப் பின்னர் 1988-ல்தான் மோட்டார் வாகனச் சட்டம் முதன்முறையாக மாறுதலுக்கு உட்படுத்தப்பட்டது. தமிழகத்தில் 1974-ல் தமிழக அரசால் சில மோட்டார் வாகன விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன.
மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா 2017-ம் ஆண்டு மக்களவையில் அறிமுகம் செய்யப் பட்டு, நிலைக்குழு அளித்த சில பரிந்துரைகளுடன் நிறைவேற்றப் பட்டது.
ஆனால், மாநிலங்களவை தேர்வுக் குழு, இது தொடர்பாக எவ்வித பரிந்துரையும் செய்ய வில்லை. இதனால், பிரதமர் மோடி தலைமையிலான முதல் ஆட்சியின் போது இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.
மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா காலாவதியான நிலையில், மீண்டும் அதை நிறை வேற்ற மத்திய அரசு துடிக்கிறது. அதை சட்டமாக்க பெரிதும் முயற் சிக்கிறது. மத்திய அமைச்சரவையும் சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
மக்களை பாதிக்கும்
புதிய மசோதாவில் 60-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் 20 புதிய பிரிவுகள் சேர்க்கப்பட் டுள்ளன. சாலைப் போக்குவரத்து விதிமுறைகளைப் புதுப்பித்தல், சாலை பாதுகாப்பை பராமரித்தல், ஊழலை ஒழித்தல், சிறந்த தொழில்நுட்பங்களைப் பயன் படுத்தல் ஆகியவற்றுக்காக இந்த சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டதாக மத்திய அமைச்சர் கள் தெரிவிக்கின்றனர். ஒரு சில நன்மைகள் இருந்தாலும், இந்த மசோதா மக்களைப் பாதிப்ப தாகவே அமையும், மேலும், மாநில உரிமைகளைப் பறிப்பதாகவும் இருக்கும் என்கின்றனர்.
வட்டாரப் போக்குவரத்துத் துறையில் அனுபவம்மிக்க, சட்ட விதி களில் தெளிவுபெற்ற சிலர் கூறிய தாவது: “வேகமாக வாகனம் ஓட்டினால் ரூ.1000 முதல் ரூ.2,000 வரை அபராதம், ஹெல்மெட் இல்லாமல் ஓட்டுவது, போக்கு வரத்து விதிகளை மீறுவது, உரிமம் இல்லாமலோ, ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலோ ஓட்டுவது, ஆம்புலன்ஸ், தீயணைப்பு போன்ற அவசர சேவை வாகனங்களுக்கு வழிவிடாமல் ஓட்டுவது, மது போதையில் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட விதிமீறல்களுக்காக அபராதத் தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல, பல்வேறு விதிமுறைகள் புதிதாக புகுத்தப்பட் டுள்ளன. சாலை விதிகள் மீதான குற்றங்களுக்கு அபராத தொகையை அதிகப்படுத்துவது தான் முக்கிய நோக்கம் என்று கூறப்படுகிறது. தற்போதுள்ள மோட்டார் வாகனச் சட்டத்தில், குற்றங்கள், அதற்கான அபராதங் கள், தண்டனைகள் வரையறுக் கப்பட்டுள்ளன. இதில் குற்றங் களை புதிதாக சேர்க்கவும், அப ராதம், தண்டனையை மாற்றி வரை யறுக்கவும், சட்டப் பிரிவுகளில் மாற்றம் செய்வதன் மூலமாகவே செயல்படுத்த முடியும். அவ்வாறு இருக்கையில், மோட்டார் வாகன சட்டத்தின் அத்தனை அத்தியாயங் களையும் மாற்றி எழுத வேண்டிய அவசியம் இல்லை.
விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நன்மை அளிக்கும் சட்டம் என்று கூறிவிட்டு, பாதிக்கப்பட்டவருக்கு காப்பீட்டு நிறுவனங்கள் ரூ.5 லட்சத்துக்கு மேல் இழப்பீடு தர வேண்டியதில்லை என்ற சட்டத் திருத்தத்தை கொண்டுவந்தது ஏன்? கட்டணம் மற்றும் வாகன வரி வசூலிக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளிடம் இருந்து நீக்கி, தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் சட்டப்பிரிவைக் கொண்டுவருவது ஏன்? இவ்வாறு எண்ணற்ற கேள்விகள், வாகன சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றத் துடிக்கும் மத்திய அரசின் முன் வைக்கிறோம்.
சட்டத் திருத்தம் செய்வதன் மூலம், போக்குவரத்துத் துறையை முற்றிலும் லாபம் ஈட்டுவதற்கும், தனியார் மயமாக்குவதற்கும் மட்டுமே உதவும். மாநில அரசு களின் அதிகாரங்கள் பெருமளவு குறைக்கப்படும். மேலும், அரசுக் கான வருவாயும் குறைந்துவிடும்.
எனவே, இதை எதிர்க்க வேண்டியது மாநில அரசுகளின் கடமை. தமிழக முன்னாள் முதல் வர் ஜெயலலிதா, இந்த சட்டத் திருத்தத்தை கொண்டுவர அப் போது கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக நடந்த மாநில போக்குவரத்து ஆணையர்களின் கூட்டமைப்புக் கூட்டத்தில் சட்டத் திருத்தத்தின் ஒருசில பிரிவு களுக்கு அப்போது கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
எனவே, தமிழக அரசு மட்டு மின்றி, அனைத்து மாநில அரசு களுமே, இதில் உள்ள பாதகங் களைத் தெரிந்துகொண்டு, மோட் டார் வாகன சட்டத் திருத்த மசோதாவை சட்டமாக்காமல் தடுக்க வேண்டும்” என்றனர்.