தமிழக மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி தெரிவித்தார்.
தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி டி.கே. ராஜேந்திரன் ஓய்வு பெற்றதை அடுத்து புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்ட ஜே.கே. திரிபாதி இன்று முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டார்.
சென்னை காமராஜர் சாலையில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தில் தனது அறையில் புதிய பொறுப்பை ஏற்ற டிஜிபி திரிபாதியிடம் பொறுப்பை ஒப்படைத்த முன்னாள் டிஜிபி டி.கே. ராஜேந்திரன் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் புதிய டிஜிபிக்கு காவல் உயர் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பதவியேற்றபின் செய்தியாளர்களுக்கு சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி அளித்த பேட்டி:
"தமிழக மக்களுக்கு பணியாற்றிட எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தமிழக முதல்வருக்கு ம், தமிழகஅரசிற்கும் நன்றி.
தமிழக மக்களுக்கு சிறந்த சேவையை ஆற்றுவேன்.சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும், குற்றங்களை களைவதிலும் முன்னுரிமை அளிக்கப்படும்.எனது பணியில் பொதுமக்களும் ஊடகங்களும் எனக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
மற்றொரு நாளில் ஊடகங்களை சந்தித்து விரிவாக பேசுகிறேன்"
இவ்வாறு டிஜிபி திரிபாதி தெரிவித்தார்.