தமிழகம்

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வாழ்த்து தெரிவித்தார் ஞானதேசிகன்

செய்திப்பிரிவு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு முன்னாள் தலைவர் ஞானதேசிகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், காங்கிரஸ் மேலிடம் குறித்து தாம் விமர்சிக்கவில்லை என்றும் கட்சித் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரைச் சுற்றி இருக்கும் சிலரைப் பற்றியே விமர்சனங்களை முன்வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழக அரசியல் களத்தில் காங்கிரஸ் கட்சி எதிர்நோக்கியுள்ள சவால்களை சமாளித்து இளங்கோவன் சிறப்பாக செயல்படுவார் எனவும் ஞானதேசிகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT