தமிழகம்

புதிய ரூ.50, ரூ.200 நோட்டுகள் சென்னையில் விநியோகம்

ம.பிரபு

ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 50 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் சென்னையை வந்தடைந்தன.

இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னை கிளையில் இன்று (திங்கட்கிழமை) முதல் புதிய ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்படுகின்றன.

மத்திய அரசு கடந்த ஆண்டு (2016) நவம்பர் மாதம் 8-ம் தேதி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது. பின்பு புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

உயர் மதிப்பு நோட்டுகளுக்குப் பதிலாக குறைந்த மதிப்பு நோட்டுகளை அறிமுகப்படுத்தினால் சில்லறைத் தட்டுப்பாடு தீரும் என பல்வேறு தரப்பிலும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து புதிய 50 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில் இன்று காலை புதிய நோட்டுகள் சென்னையை வந்தடைந்த உடன், பொதுமக்களுக்கு நோட்டுகள் விநியோகம் செய்யப்பட்டன. பலரும் வரிசையில் காத்திருந்து புதிய ரூ.50, ரூ.200 நோட்டுகளை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

SCROLL FOR NEXT