தெற்கு அந்தமான் தீவு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது தமிழகத்தை நோக்கி வர வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் தீவில் நேற்று புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறும் போது, ''தெற்கு அந்தமான் தீவில் உருவாகி யுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகத்தை நோக்கி வர வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும். குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்'' என்றார்.
திங்கள்கிழமை காலை 8.30 மணி வரை துறையூர்,சமயபுரம், லால்குடி ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை, திருச்சி மாவட்டம் திருச்சிராப் பள்ளி டவுன் ஆகிய இடங்களில் 1 செ.மீ. மழை பெய்துள்ளது.