அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1,095 உதவி பேராசிரியர்களை நியமிக்கும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது.
இதற்காக பாடவாரியாக நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு மதிப்பெண் பட்டியலும், தேர்வுப்பட்டியலும் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.
ஆங்கிலம், தாவரவியல், விலங்கியல், மீன் வளர்ப்பியல் (அக்வா கல்ச்சர்) ஆகிய பாடங்களுக்கு ஏற்கெனவே மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது தேர்வுப்பட்டியலை தனது இணையதளத்தில் (www.trb.tn.nic.in) ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
தேர்வுசெய்யப்பட்டவர் களுக்கு பணிநியமன ஆணை விரைவில் வழங்கப்படும்.