தமிழகம்

காங். பொருளாளர் கோவை தங்கம் ராஜினாமா

செய்திப்பிரிவு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து தமிழக காங்கிரஸின் பொருளாளரான கோவை தங்கமும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

காமராஜர் மற்றும் மூப்பனாரின் உருவப்படங்கள், காங்கிரஸ் உறுப்பினர் அட்டையில் இடம் பெறக்கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் நிறுத்தி வைப்பது உள்நோக்கம் கொண்டது. இதையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தனது பதவியை ராஜினாமா செய்தார், தொண்டர்கள் கொந்தளித்தனர். இதற்கு பிறகே காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஜய் மக்கான் அறிக்கை வெளியிட்டுள்ளது மறைந்த தலைவர்களின் புகழுக்கு உகந்ததல்ல. எனவே ஞான தேசிக னின் ராஜினாமாவை தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எனது பொருளாளர் பதவியையும் ராஜினாமா செய்கிறேன் என்றார்.

SCROLL FOR NEXT