தமிழகம்

முகநூலில் மிரட்டல் விடுக்கும் நித்தியானந்தா ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு கடிதம்: ஜி.ராமகிருஷ்ணன் அனுப்பினார்

செய்திப்பிரிவு

முகநூலில் மிரட்டல் விடுத்து வரும் நித்தியானந்தாவின் ஆதர வாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப் பினரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தின் மாநில துணைப் பொதுச் செயலாளருமான எஸ்.கருணா திருவண்ணாமலையில் வசித்து வருகிறார். திருவண்ணாமலை யில் உள்ள பவளக்குன்று மலையை சாமியார் நித்தியானந் தரின் சீடர்கள் ஆக்கிரமிப்பு செய்ய முயன்றதை மார்க்சிஸ்ட் கட்சியினரும், பொதுமக்களும் தொடர்ச்சியாக போராடி முறிய டித்தனர். இந்தப் போராட்டங் களில் கருணா முக்கியப் பங்காற் றினார்.

மிரட்டல்

இதனால் வன்மம் கொண்ட நித்தியானந்தரின் சீடர்கள் எனக் கூறிக் கொள்வோர் முகநூல் பக்கங்களில் கருணா மற்றும் அவரது குடும்பத்தினரையும், மார்க்சிஸ்ட் கட்சியினரையும் மிகவும் கேவலமான முறையில் சித்தரித்து வீடியோவாக பதிவிட் டுள்ளனர். மிரட்டலும் விடுத்து வருகின்றனர்.

இத்தகைய அவதூறு மற்றும் மிரட்டல் வீடியோக்களையும், பதிவுகளையும் உடனடியாக நிறுத்தவும், கருணாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்கவும், மிரட்டல் விடுத்தவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கவும் ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT