சண்டை போட்டுக் கொண்டிருந்த போதை சகோதரர்களை சமாதானம் செய்யச் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளரை சகோதரர்கள் இருவரும் சேர்ந்து அடித்து உதைத்தனர்.
சென்னை சூளைமேடு அபித் நகரை சேர்ந்தவர்கள் ரமேஷ்(30), சுரேஷ்(28).
சகோதரர்களான இவர்கள் இருவரும் கார் டிரைவர்களாக உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவில் சூளைமேடு சவுராஷ்டிரா நகர் அருகில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை பாரில் மது குடித்துவிட்டு வெளியே வந்தனர். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அடிதடி வரை சென்றது.இருவரும் நடுரோட்டில் சண்டை போட, அந்த வழியாக வந்த சூளைமேடு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வேதி, சகோதரர்களின் சண்டையை சமரசம் செய்ய முயன்றார்.
அப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து உதவி ஆய்வாளர் வேதியை தாக்கினர்.
இதில் அவரின் முகம் மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டன. அவர் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்து வமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். புகாரின் பேரில் சூளைமேடு காவல் துறையினர் சுரேஷை திங்கள்கிழமை காலையில் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் ரமேஷை தேடி வருகின்றனர்.