தமிழகம்

தடுப்பணை கட்டும் முயற்சியை கைவிட கர்நாடக முதல்வரிடம் வலியுறுத்துவோம்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி

செய்திப்பிரிவு

காவிரியின் குறுக்கே 2 தடுப் பணைகள் கட்டும் முயற்சியைக் கைவிடுமாறு கர்நாடக மாநில முதல்வரைச் சந்தித்து வலியுறுத் துவோம் என்றார் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.

திருச்சியில் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

காவிரியின் குறுக்கே 2 தடுப் பணைகள் கட்டப்போவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளதாக செய்தி வந்துள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு குழு கர்நாடக முதல்வர் சித்தராமையாவைச் சந்தித்து, காவிரியின் குறுக்கே அணை கட்டும் முயற்சியைக் கைவிடும்படி கோரிக்கை வைக்கும். எங்களது கோரிக்கையை சித்தராமையா ஏற்றுக்கொண்டு அணை கட்டும் முயற்சியை கைவிடுவார் என நம்புகிறோம். அப்படி ஏற்க மறுத்தால் தமிழக காங்கிரஸ் கட்சி கடும் போராட்டத்தில் ஈடுபடும்.

வாசன் அணியைச் சேர்ந்த வர்கள் கட்சியை வளர்க்க முயற்சி செய்வதை விட்டுவிட்டு கட்சி அலுவலகங்களை கைப்பற் றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது அநாகரிகமான செயல்.

நான் பதவியேற்றுக்கொண்டதி லிருந்து 12 நாட்கள் வாசனைப் பற்றியே பேசி நேரத்தை வீண டித்துவிட்டேன். இனி அவரைப் பற்றிப் பேசப்போவதில்லை. கட்சி வளர்ச்சி நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப் போகிறேன்.

தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்தை விரைவில் தமிழக காங்கிரஸ் கட்சி குழுவினர் சந்தித்து வேலையில்லா திண் டாட்டம், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கவுள்ளனர்.

ராஜபக்ச தொடர்ந்து தமிழக மீனவர்களை துன்புறுத்தி வருகிறார். இந்திய அரசு இலங்கை யில் ராஜபக்ச தலைமையிலான அரசை அகற்றிவிட்டு தமிழர் களுக்கு சாதகமான ஒரு நபரை தலைமைப் பொறுப்பில் அமர வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

கட்சியின் கோஷ்டி பிரச்சினை குறித்து கேட்டபோது, “காங்கிர ஸில் கோஷ்டிகள் என எதுவு மில்லை. எங்களுக்கு வேலை யில்லாதபோது நாங்கள் சில பல பிரச்சினைகளில் ஈடுபடுவதுண்டு. அவ்வளவுதான். இப்போது அனை வருக்கும் நிறைய வேலைகள் இருக்கின்றன.

அதனால் கோஷ்டி பிரச்சினையில் கவனம் செலுத்த மாட்டோம். நானும் தங்கபாலுவுமே இப்போது ஒன்றாக சேர்ந்து பல நிகழ்ச்சிகளுக்கு போகிறோம் என்றால் பார்த்துக்கொள்ளுங் களேன்” என்றார் கிண்டலாக.

பேட்டியின்போது முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர், திருச்சி மாநகர தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ்,தெற்கு மாவட்ட தலைவர் ஆர்.சி.பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT