சென்னை ஐ.ஐ.டி.யில் உற்பத்தி துறை தொடர்பான சிறப்பு முதுகலை படிப்பு வழங்கப் படும் என அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.
ஐஐடி கான்பூர், ஐஐஎம் கொல்கத்தா ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்படும் இப்படிப்பில் ஏதேனும் ஒர் உற்பத்தி துறையில் நிர்வாக பொறுப்புகளில் 4.5 முதல் 10 ஆண்டு அனுபவம் உள்ளவர்கள் சேரலாம்.
இந்த படிப்பு ஓராண்டு கால உறைவிட படிப்பாகும். 9 மாதங் கள் ஐஐஎம் கொல்கத்தாவிலும், ஐஐடி கான்பூரிலும் அதன்பிறகு ஐஐடி சென்னையிலும் பயிற்சி அளிக்கப்படும். எஞ்சிய 3 மாதங்கள் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் ‘இன்டர்ன்ஷிப்’ ஆக பணியாற்ற வேண்டும். அத்துடன் ஜப்பான் நாட்டுக்குச் சென்று அங்கு சர்வதேச அளவிலான வர்த்தக பிரச்சினை களை தெரிந்துவருவதும் இப்படிப்பின் ஓர் அங்கமாகும். இப்படிப்புக்கான அட்மிஷன் வரும் 20-ம் தேதி முடிவடையும் என்று சென்னை ஐஐடி அறிவித்துள்ளது.