கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்கி இருந்தபோது எந்த தவறும் நடக்கவில்லை என அதிமுக (அம்மா) துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித் துள்ளார்.
இது தொடர்பாக அவர் சென்னையில் நிருபர்களின் கேள்விக்கு பின்வருமாறு பதில் அளித்தார்.
மாட்டிறைச்சி விவகாரத்தில் உங்களது நிலைப்பாடு என்ன?
மக்களை பாதிக்காதவாறு எந்த ஒரு சட்டமும் இருக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.
எம்எல்ஏக்களை பேரம் பேசி விலைக்கு வாங்கி இருப்பதாகவும், ஆட்சியைக் கலைக்க வேண்டுமென திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் மனு அளித்துள்ளாரே?
கூவத்தூரில் எம்எல்ஏக்கள் இருக்கும்போது எந்த தவறும் நடக்கவில்லை.
சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமெனவும் மு.க.ஸ்டாலின் கூறியுள் ளாரே?
சிபிஐ விசாரணை மட்டு மல்ல, சர்வதேச போலீஸ் விசாரணை நடத்தினாலும் கவலையில்லை. மடியில் கனம் இருந்தால்தானே எங்களுக்கு பயம் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.