தமிழகம்

அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தை விலக்கி வைப்பது தர்ம யுத்தத்துக்கு கிடைத்த முதல் வெற்றி: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து

செய்திப்பிரிவு

அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தை விலக்கி வைப்பது என அவர்கள் தரப்பில் முடிவு எடுத் திருப்பது தர்ம யுத்தத்தின் முதல் வெற்றி என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விடுத்த முக்கிய கோரிக் கையை ஏற்றுக் கொள்வதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் நேற்று காலை முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில் அவைத் தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கே.பி.முனுசாமி, ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், ப.மோகன், நத்தம் விஸ்வநாதன், செம்மலை, சண்முகநாதன், கே.பாண்டிய ராஜன், எம்பிக்கள் மைத்ரேயன், பி.ஆர்.சுந்தரம் மற்றும் சட்டப் பேரவை முன்னாள் தலைவர் பி.எச். பாண்டியன், முன்னாள் எம்பிக்கள் மனோஜ் பாண்டியன், கே.சி. பழனிச் சாமி, பொன்னுசாமி முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டம்

காலை 11 மணி அளவில் தொடங் கிய ஆலோசனை கூட்டம் 1 மணி நேரம் நடந்தது. கூட்டத்தில், அதிமுக அணிகள் இணைப்புக்கு வர வேற்பு குறித்தும், அடுத்தகட்ட முக்கிய நடவடிக்கைகள் குறித் தும் ஆலோசிக்கப்பட்டது.

பின்னர், ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:

எம்ஜிஆர், அதிமுக என்ற இயக் கத்தை உருவாக்கி, அதனை மக்கள் இயக்கமாகவும், தொண்டர்கள் இயக்கமாகவும் வளர்த்தார். அதன்பின்னர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 28 ஆண்டுகளாக பொதுச்செயலாளராக இருந்து அதிமுகவை மாபெரும் மக்கள் இயக்கமாக நடத்தி வந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா குடும்பத்துக்கு அதிமுக சென்று விட்டதைத் தடுத்து நிறுத்த, இருபெரும் தலைவர்களின் கொள்கைகளை அடிப்படைக் கருத்தாக வைத்து தர்ம யுத்தப் போராட்டத்தை தொடங்கினோம்.

அதன் முதல் வெற்றியாக சசிகலா குடும்பத்தை விலக்கி வைப்பது என்று அவர்கள் தரப்பில் முடிவு எடுத்திருக்கிறார்கள். மக்கள் எண்ணப்படி, தொண்டர்கள் விருப் பத்தின்படி அறவழிப் போராட்டம் வலுப்பெற்று, அதிமுக தொண் டர்கள் இயக்கம் என் பதை நிரூபித்துக் காட்டுவோம். இதற்கிடையே, தமிழக மக் களின், கட்சியின் தொண்டர் களின் விருப்பத்தின்படி நடை முறைப்படுத்த இருதரப்பும் உட் கார்ந்து பேசி முடிவெடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT