தமிழகம்

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

செய்திப்பிரிவு

தலைமைச் செயலர் மோகன் வர்கீஸ் சுங்கத் பிறப்பித்த உத்தரவு:

தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகம் (டான்சி) மேலாண் இயக்கு நர் வி.அமுதவல்லி தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநராக மாற்றப்பட் டுள்ளார். அங்கு பணிபுரியும் மைதிலி கே.ராஜேந்திரன், தமிழ்நாடு பாடநூல் கல்விச் சேவைக் கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பொறுப்பை பூஜா குல்கர்னி கூடுதலாகக் கவனித்து வந்தார்.

மத்திய அரசின் மருந்தகத் துறை முன்னாள் இணை செயலர் ஷம்பு கல்லோலிகர் மீண்டும் மாநிலப் பணிக்கு மாற்றப்பட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றும் வி.கே.ஜெயக்கொடி எரிசக்தி நிதி மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (பவர் பைனான்ஸ்) முதன்மைச் செயலர் மற்றும் மேலாண் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். இந்தப் பணியை ராஜேஷ் லகானி கூடுதலாகக் கவனித்து வந்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு உத்தரவில், ‘கோவை மாநகராட்சி ஆணையர் எஸ்.கணேஷ் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சிய ராக இருந்த சி.மனோகரனுக்கான மாற்றம் குறித்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்படும்,’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT