தமிழகம்

குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக அதிமுக இரு அணிகளையும் மிரட்டி பணிய வைக்கிறார் மோடி: திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அதிமுக வின் இரு அணிகளையும் பிரதமர் நரேந்திர மோடி மிரட்டி பணிய வைப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஒரு வாரத்துக்குள் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல் வமும், முதல்வர் கே.பழனிசாமியும் பிரதமர் நரேந்திர மோடியை அடுத்த டுத்து சந்தித்துள்ளனர். இவர்கள் நேரம் கேட்டு பிரதமரை சந்தித்தார் கள் என்பதைவிட மோடியால் டெல் லிக்கு அழைக்கப்பட்டு டெல்லி சென்றனர் என்பதே உண்மை.

தமிழக நலன் சார்ந்த கோரிக்கை களை முன் வைப்பதற்காக ஓபிஎஸ் ஸும், முதல்வரும் மோடியை சந்திக்கவில்லை. இந்த சந்திப்பு முழுக்க முழுக்க அரசியல் உள் நோக்கம் கொண்டது. விரைவில் நடைபெறவுள்ள குடியரசுத் தலை வர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அதிமுக வின் இரு அணிகளையும் மிரட்டி பணிய வைக்கும் முயற்சியில் மோடி ஈடுபட்டுள்ளார். அதற்காகவே அதிமுகவின் இரு அணி தலை வர்களையும் அழைத்துப் பேசியுள்ளார்.

முதல்வர் பழனிசாமி அணியிடம் 40 ஆயிரம் வாக்குகளும், ஓபிஎஸ் அணியிடம் 10 ஆயிரம் வாக்குகள் உள்ளன. எனவே இருவரது ஆதரவையும் பெற பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் காய்களை நகர்த்தி வருகின்றனர்.

தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு தீர்வுகாண தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. போராட்டங்கள் நடத்தியும் விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.

SCROLL FOR NEXT