தமிழகம்

சென்னை விமான நிலையத்துக்கு பலத்த பாதுகாப்பு

செய்திப்பிரிவு

பெங்களூரு விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பெங்களூரு விமான நிலையத் துக்கு நேற்று முன்தினம் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட போலீஸார் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டு வரும் உடைமைகள் அனைத்தும் தீவிர சோதனைக்குக் பிறகே, விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT