தமிழகம்

ஆசியாவிலேயே முதன்முறையாக மூட்டு சீரமைப்பு அருங்காட்சியகம் உருவாக்கம்: மியாட் மருத்துவமனையில் திறப்பு

செய்திப்பிரிவு

மியாட் மருத்துவமனையில் ஆசியாவிலேயே முதன் முறையாக மூட்டு சீரமைப்பு அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. மூட்டு வலிக்கான அதிநவீன சிகிச்சைகள், மூட்டு வலி தடுப்பு பற்றி விழிப்புணர்வு அளிக்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் 300 சதுர அடியில் மூட்டு சீரமைப்புக்கான நிரந்தர அருங்காட்சியகம் மற்றும் 30 ஆயிரமாவது மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கான விழா வியாழக்கிழமை நடந்தது. மியாட் மருத்துவமனையின் தலைவர் மல்லிகா மோகன்தாஸ் இதை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் மியாட் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் மோகன் தாஸ் பேசியதாவது:

மியாட் மருத்துவமனையில் 30 ஆயிரம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. இதில், 20 ஆயிரம் இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளையும், 10 ஆயிரம் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளையும் மேற்கொண்டுள்ளோம். இது பெரிய சாதனையாகும். இங்கு அமைக்கப்பட்டுள்ள அருங் காட்சியகத்தில் மூட்டு வலி தடுப்பு முறைகள், மூட்டு வலிக்கான காரணங்கள், தற்போதுள்ள அதிநவீன தொழில்நுட்பம் மூலம் அளிக்கும் சிகிச்சை முறை உள்ளிட்டவை குறித்து விளக் கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT