காங்கிரஸ் தலைமையை ஆதரவாளர்கள் விமர்சித்துப் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜி.கே.வாசன் எச்சரித்துள்ளார்.
சென்னையில், செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்தார். கட்சியின் பெயர், சின்னம் ஆகியன தொடர்பான தேர்தல் ஆணைய நடவடிக்கைகள் நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக திங்கள்கிழமையன்று ஜி.கே.வாசன் புதிய கட்சியை தொடங்கினார். ‘வளமான தமிழகம், வலிமையான பாரதம்’ என்ற கொள்கை மூலம் தமிழக மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையிலே, புதிய அரசியல் பாதையை வகுத்து பணியாற்றுவோம். மூப்பனார் கட்சி ஆரம்பித்த போது, அவருக்கு ஆதரவு அளித்ததுபோல் தமிழக மக்கள் எங்களுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும் என கோரினார் என்பது கவனிக்கத்தக்கது.