தமிழகம்

விபத்தில் சிக்கியவர்களுக்கு எப்ஐஆர் நகல் வீட்டுக்கு வரும்: கமிஷனர் ஜார்ஜின் புதிய திட்டம்

செய்திப்பிரிவு

சாலை விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் எப்ஐஆர் நகலை வாங்குவதற்கு காவல் நிலையம் வந்து அவதிப்படுவதை தடுக்க அவர்களின் வீடுகளுக்கே தபாலில் அனுப்பும் திட்டத்தை கமிஷனர் ஜார்ஜ் தொடங்கி வைத்தார்.

காவல் ஆணையர் ஜார்ஜ், கூடுதல் ஆணையர் தாமரைக் கண்ணன், இணை ஆணையர் அருண், துணை ஆணையர் சிவக்குமார் உட்பட பல அதி காரிகள் கலந்து கொண்ட கூட்டம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.

இதில் விபத்தில் சிக்கியவர்களின் மருத்துவ சிகிச்சைகள், இன்சூரன்ஸ் உட்பட பல விஷயங்களுக்கு போலீஸார் வழங்கும் முதல் தகவல் அறிக்கை(எப்ஐஆர்) மிகமுக்கியம். விபத்தில் சிக்கிய வர்கள் காயங்களுடன் சிரமத்தில் இருக்கும் நிலையில், முதல் தகவல் அறிக்கையை காவல் நிலையம் வந்து வாங்குவதற்கு அவர்களுக்கு மேலும் சிரமமாக இருக்கும்.

எனவே இன்று (10-11-2014) முதல் விபத்தில் சிக்கியவர்களின் வீடுகளுக்கே முதல் தகவல் அறிக்கை தபாலில் அனுப்பி வைக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT