அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் பேசியதாவது:
ஆளும் கட்சியான அதிமுக இரு அணிகளாகப் பிளவுபட்டுக் கிடப்பதால், இன்றைக்கு தமிழக அரசு சுதந்திரமாக இயங்குகிறதா என்று கேள்வி எழுப்ப நேர்கிறது. ஆகவே மத்திய அரசின் தலையீடு இல்லாமல், இருவரும் ஒன்றுபட வேண்டும்.
மக்கள் வழங்கிய ஆட்சி அதிகாரத்தை 5 ஆண்டுகளுக்கு முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். இந்த ஆட்சி ஐந்தாண்டு காலத்துக்குத் தொடர வேண்டும். இதன் அடிப்படையில் இரு அணிகளும் ஒன்றிணைவதுதான் எங்கள் விருப்பம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.