தமிழகம்

ஆட்சியைக் காப்பாற்றவே பாஜகவுக்கு அதிமுக அணிகள் ஆதரவு: நல்லகண்ணு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காகவே குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளரை அதிமுக அணிகள் ஆதரித்துள்ளன என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழகத்தில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காகவே குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளரை அதிமுக அணிகள் ஆதரித்துள்ளன.

அதிமுகவின் மூன்று அணியினரும் தங்களுக்குள் போட்டியிட்டுக் கொள்கின்றனரே தவிர தங்களை ஆதரிக்கும் பாஜகவுக்கு முழு ஆதரவாக இருக்கின்றனர்.

தமிழகத்தில் அதிமுகவை பாஜகவே வழிநடத்துகிறது. அதிமுக அணியினர் போட்டியை பாஜகவும் பயன்படுத்திக் கொள்கிறது.

அதிமுகவினர் ஆட்சியை தக்கவைப்பதில் கவனம் செலுத்துகின்றனரே தவிர எந்த ஒரு புதிய திட்டங்களும் மாநிலத்தில் இல்லை" என்றார்.

அவர் மேலும் கூறும்போது "எந்தஒரு மாநிலத்தில் இந்தி இருக்கலாம் ஆனால் இந்தி திணிப்புதான் இருக்கக்கூடாது. கீழடி அகழ்வாய்புப் பொருட்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

SCROLL FOR NEXT