சீர்காழி அருகே திருக்கருகா வூரில் இயங்கிவரும் தனியார் நவீன அரிசி ஆலையை எரிவாயுவைக் கொண்டு இயங்க வைப்பதற்கான முயற்சியை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மேற்கொண்டிருந்தது.
இதற்கான அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் எரிவாயுவைக் கொண்டு ஆலையின் இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தியாவிலேயே முதல்முறை யாக எரிவாயுவில் இயங்கும் வகையில், புதிய கட்டமைப்புடன் கூடிய இந்த அரிசி ஆலையை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன செயல் இயக்குநர் சித்தார்த்தன் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், “தற்போதைய சூழலில் நவீன அரிசி ஆலைகளால் காற்று மாசுபடுவதாலும், அதிக அளவில் மனித சக்தி தேவைப்படுவதாலும் அரிசி ஆலைகள் படிப்படியாக மூடப்பட்டுவரும் சூழல் ஏற்பட்டுள் ளது. இந்நிலையில், இந்த புதிய திட்டத்தின் மூலம் எரிவாயுவைக் கொண்டு நவீன அரிசி ஆலைகளை இயக்குவதால் காற்று மாசுபடாது, செலவு குறையும், மிகக்குறைந்த மனித சக்தியே போதுமானது. மிக எளிதில் ஆலையை இயக்க முடியும்” என்றார்.