தமிழக சட்டப்பேரவையில் நடந்த விவாதம்:
கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ்):
அரசு மணல் அள்ளுவதில் சரியான நடைமுறையைப் பின்பற்றாத தால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் மணல் அள்ளுவதில் புதிய கொள்கையை முதல்வர் அறிவித்தார். அதற்கு முன் இருந்த நடைமுறைக்கும்,புதிய நடைமுறைக்கும் என்ன வித்தி யாசம் என்பது தெரியவில்லை.
முதல்வர் கே.பழனிசாமி:
தமி ழகத்தில் உள்ள 23 குவாரிகளை யும் தற்போது அரசே ஏற்று நடத்தி வருகிறது. 6 குவாரிகளில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளப்படுகிறது. முன்பு, தனியார் மூலம் மணல் விற்கப்பட்டதால், எடுக்கும் இடத்தில் இருந்து சாலைகளை, அவர்களே தனியார் நில உரிமையாளர்களிடம் பேசியும், வேறு முறைகளிலும் அமைத்துக் கொண்டனர். தற்போது அரசே மணல் எடுப்பதால், நில உரிமையாளர்கள் சாலைகளை மூடிவிட்டனர்.
இதனால், ஆற்றங்கரைகளில் 10 கிமீ தூரத்துக்கு சாலை அமைக் கப்படுகிறது. மேலும், குவாரிகளில் 3,4 யூனிட் மணல் ஏற்றப் படுவதில்லை, அரசு நிர்ணயித்த அளவுக்கே ஏற்றப்படுகிறது. தற்போது ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு, குறித்த நேரத்தில் சென்றால் மணல் எடுக்க முடியும் என்ற நிலை உள்ளது. மணல் பிரச்சினை மிகக்குறுகிய காலத்தில் தீ்ர்க்கப்படும்.
ராமசாமி:
ஆன்லைன் பதிவு என்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இதற்கு முன் இருந்தது போல்தான் தற்போதும் அரசு மணல் விற்கிறது.
முதல்வர் கே.பழனிசாமி:
ஆன்-லைன் மூலம் மணல் விற்கப்படும் நிலையில், யார்டு (கிடங்கு) அமைத்து மணலை தேக்கி விற்றால்தான் இதற்கு முழுமையான தீர்வு கிடைக்கும். எனவே, விரைவில் கிடங்கு அமைத்து மணல் விற்பனை தொடங்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.