அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி என்.சுந்தரதேவன், கான்பூர் ஐஐடி முன்னாள் இயக்குநர் கே.அனந்த பத்மநாபன் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
நீதிபதி ஆர்.எம்.லோதா தலை மையிலான தேர்வுக் குழுவினர் நேற்று மதியம் 12 மணி அளவில் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநரும், அண்ணா பல்கலைக்கழக வேந்தருமான வித்யாசாகர் ராவை சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பு 20 நிமிடம் நீடித்ததாக ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.
துணைவேந்தர் பதவிக்கு 3 பேரை ஆளுநரிடம் தேர்வுக் குழு பரிந்துரை செய்யும். அவர்களில் ஒருவரை துணைவேந்தராக தேர்வு செய்து ஆளுநர் நியமிப்பார்.