தமிழகம்

டாக்டர் வீட்டில் நகை கொள்ளை வழக்கு: கொல்கத்தாவில் இருவர் கைது

செய்திப்பிரிவு

சென்னை அண்ணாநகரில் மருத்துவர் ஒருவரின் வீட்டில் துப்பாக்கி முனையில் நகையும், ரூ.3.5 லட்சமும் கொள்ளையடித்து சென்ற வழக்கில் கொல்கத்தாவில் இருவரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

அண்ணாநகரை சேர்ந்த மருத்துவர் ஆனந்தன் சமீபத்தில் வழக்கம் போல பணிக்குச் சென்று இருந்தார். அப்போது, வீட்டில் அவரது மனைவியும், தாயாரும் இருந்துபோது, இருசக்கர வாகனத் தில் வந்த இருவர் ஆனந்தனின் மனைவி மற்றும் அவரது தாயாரைத் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர்.

பின்னர், அவர்களின் கைகளை கட்டிய கொள்ளையர்கள் வீட்டில் இருந்த 75 சவரன் நகைகளை யும், ரூ.3.5 லட்சம் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக தெரிவித்துள் ளனர். ஆனந்தன் வீட்டில் பணி புரிந்து வந்த மீனா என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது கணவரும் வட மாநிலத் தைச் சேர்ந்த ஒருவரும் இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரியவந்திருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, நகை மற்றும் பணத்துடன் தப்பி ஓடியவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த 5-ம் தேதி முதல் போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலை யில், கொல்கத்தாவில் வேலைக் காரியின் கணவர் இம்ரான், அவனது கூட்டாளி கபீர் என்பவரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். இதையடுத்து, போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT