தமிழகம்

சேலம் தலைவாசல் அருகே பெருமாள் கோயிலில் நிலவறை, 9 சிலைகள், சுரங்கம் கண்டுபிடிப்பு

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே நாவக்குறிச்சி கிராமத்தில் ஆயிரமாண்டு பழமையான பூரண நாராயண பெருமாள் சுவாமி கோயில் உள்ளது. மிகவும் பழுதடைந்திருந்த இக்கோயிலை, ஊர் மக்கள் மூன்றாண்டுகளுக்கு முன்பு சீரமைத்தனர். கோயிலில் ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி கட்டி கோபுரம் அமைக்கும் பணியை மேற்கொள்ள பொதுமக்கள் முடி வெடுத்தனர். இதன்படி, நேற்று காலை கிராம மக்கள் கட்டுமான பணிக்காக அஸ்திவாரம் தோண் டும் பணியில் ஈடுபட்டனர். அப் போது, ஐந்தடி ஆழத்தில், கற் பலகை தென்பட்டது. அதனை அகற்றியபோது, பூமிக்கடியில் நிலவறை இருப்பது தெரியவந் தது. அந்த நிலவறையில் உலோகங் களால் ஆன சுவாமி சிலைகள் இருந்தன.

இதுகுறித்து ஊர் மக்கள், இந்து சமய அறநிலையத்துறை, வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதிகாரிகள் நேரில் வந்து ஜேசிபி மூலம் நிலவறையை தோண்டும் நடவடிக் கையில் ஈடுபட்டனர்.

நிலவறைக்குள் பெருமாள், தேவி, பூதேவி, சக்கரத்தாழ்வார், கருடாழ்வார் உள்பட ஒன்பது உலோக சிலைகள் இருந்தன. கோயிலின் தெற்கு பகுதியில் சுரங்கப் பாதை செல்வதும் கண்டறியப்பட்டது. அதிகாரிகள் சிலையைக் கைப்பற்றி, அவை ஐம்பொன் சிலைகளா அல்லது வேறு உலோகத்திலானவையா என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், கோயிலின் நிலப்பரப்புக்கு கீழே வேறு ஏதேனும் நிலவறை உள்ளதா என்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் வீரராகவன், பொன்.வெங்கடேசன் கூறும்போது, ‘தற்போது கண்டறியப் பட்டுள்ள இச்சிலைகள் 15-ம், 16-ம் நூற்றாண்டு விஜயநகர பேரரசுகளின் காலத்தில் உருவாக்கப்பட்ட சிலைகளாக இருக்க வாய்ப்புள்ளது. தொல்லி யல் துறை மூலம் இக்கோயிலை ஆய்வுக்கு உட்படுத்தினால் மேலும் பல வரலாற்று ஆவணங்கள், சான்றுகள் கிடைக்க வழி ஏற்படும்’ என்றனர்.

SCROLL FOR NEXT