திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் வரும் 15-ம் தேதி திவா கரன் ஏற்பாடு செய்திருந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் தம்பி திவாகரன், ஜூலை 15 -ல் மன்னார்குடியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தார். இதில், 6 அமைச் சர்கள் உட்பட 20-க்கும் மேற் பட்ட எம்எல்ஏக்கள் பங்கேற்பதாக கூறப்பட்டது. விழா முன்னேற்பாடு களை ஒவ்வொரு நாளும் திவாகரன் நேரில் பார்வையிட்டு வந்தார்.
இந்நிலையில், இந்த விழா பொதுக்கூட்டம், குடியரசுத் தலைவர் தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் கூட்டம் நடைபெறும் தேதியை திவாகரன் விரைவில் அறிவிப்பார் எனவும் திருவாரூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் நேற்று தெரிவித்தனர்.
மன்னார்குடி விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி பங்கேற்க உள்ளதாகவும், அவரின் தேதி கிடைப்பதற்காகவே பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப் பட்டு உள்ளதாகவும் அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.