தமிழகம்

நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணி: ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை - 23 கிலோ தங்கம், ரூ.41 லட்சம் பறிமுதல்

செய்திப்பிரிவு

தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையில் சாலைப்பணி ஒப்பந்த தாரராக இருப்பவர் தியாகராஜன். கடந்த 15 ஆண்டுகளாக இவர் அரசு ஒப்பந்தப் பணிகளைச் செய்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளாக வருமானத்தை குறைத்துக் காட்டி வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்து றைக்கு புகார் வந்தது. புகாரைத் தொடர்ந்து நேற்று காலை முதல் தியாகராஜன் மற்றும் அவரது அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கே.கே.நகரில் உள்ள தியாக ராஜனின் நிறுவனம் மற்றும் அலு வலகம், அசோக் நகரில் உள்ள அவரது வீடு மற்றும் உறவினர் களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் 23 கிலோ தங்கமும், ரூ.41 லட்சம் பணமும் சிக்கியதாகக் கூறப்படுகி றது. மேலும், ஏராளமான ஆவணங் களையும் அதிகாரிகள் கைப்பற்றி யுள்ளனர். தியாகராஜனின் தந்தை குருமூர்த்தி, நெடுஞ்சாலைத் துறை யின் முன்னாள் தலைமைப் பொறி யாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT